×

போட்டி நடத்தி சினிமா வாய்ப்பு: இயக்குனர் ஆனார் அந்தோணி தாசன்

சென்னை: நடிப்பு, இசை, நடனம், பாடல் உள்ளிட்ட கலைகளில் சென்னையில் போட்டிகள் நடத்தப்பட்டது. குளோப் நெக்சஸ் நிறுவனம் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சியை நடத்தியது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது.

அத்துடன் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கும் இரு படங்களில் வெற்றி பெற்றவர்கள் பணியாற்ற உள்ளனர். அதன்படி ஒரு படத்தை இசையமைப்பாளர், பாடகர் அந்தோணி தாசனின் மற்றொரு படத்தை இயக்குனர் பி.வாசுவின் உதவியாளர் சுகுமாறனும் இயக்குகிறார்கள். அந்தோணி தாசன் பேசுகையில், ‘சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, ஒரு இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய் நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கான பெரிய வாய்ப்பு. விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. நான் இயக்கும் படத்தின் தலைப்பு, நடிப்பவர்கள் உள்ளிட்ட விவரங்கள் ஏப்ரல் 14ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்’ என்றார். குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் மீனாட்சி அருண், நிர்வாகிகள் பவித்ரா, தேவிபிரியா ஸ்டீபன், ஜெயபிரகாஷ் கலந்துகொண்டார்கள்.

The post போட்டி நடத்தி சினிமா வாய்ப்பு: இயக்குனர் ஆனார் அந்தோணி தாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anthony Dasan ,Chennai ,Globe Nexus ,Neemum ,Nakshatramai ,Kollywood Images ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்