- அம்பேத்கர்
- திருவள்ளூர்
- டாக்டர்
- அம்பேத்கர்
- ஆதி திராவிடர்
- நலன்புரி
- கமிஷன்
- தீழாகம்
- மாவட்டம்
- பிறந்தநாள் விழா
திருவள்ளூர்: திருவள்ளூரில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஜெ.சங்கர் தலைமையில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் பூந்தமல்லியில் நகர திமுக சார்பில் நகர பொறுப்பாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர். இதில் நகர மன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் ஸ்ரீதர், அண்ணாமலை, ப.ச.கமலேஷ், ஏ.ஜனார்த்தனன், எம்.முத்தமிழ்ச்செல்வன், ஜெரோத் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவள்ளூரில் நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் வி.இ.ஜான் தலைமையில் கே.ஜெயக்குமார் எம்பி, மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், வழக்கறிஞர் இமாலய கே.அருண் பிரசாத் ஆகியோர் மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மாலை அணிவித்தார். இதில் நகர செயலாளர் ஜி.கந்தசாமி, கேபிஎம்.எழிலரசன், எஸ்.வேல்முருகன், எம்.ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.விசிக சார்பில் மாநில செயலாளர் நீலவனத்து நிலவன், மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்த்தன், யோகா, அருண்கவுதம், திருவரசு ஆகியோர் மாலை அணிவித்தனர். புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி மாலை அணிவித்து வணங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் முகிலன், பா.காமராஜ், பழஞ்சூர் பா.வின்சென்ட், பூவை ஆர்.சரவணன், கூடப்பாக்கம் இ.குட்டி, பிரபாகரன், சுருளி வீரமணி, மேகநாதன், என்.பி.முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் கே.எம்.ஸ்ரீதர், சி.பி.குமார், டி.கே.சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் நாயபபாக்கம் டி.மோகன், த.இளவரசு, மதன்ராஜ், நகரத் தலைவர் புங்கத்தூர் டி.தேவா, நகர செயலாளர் மேட்டுத்தெரு எம்.எழில்வண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் ஜெய்பீம் செல்வம், மாவட்டத் தலைவர் பகுஜன் பிரேம், மாவட்ட நிர்வாகிகள் திருவூர் ரஜினி, சேலை ராஜேஷ், அம்பேத் ஆனந்த், வீரா விஜி வெற்றி வேந்தன், கவி, ராக்கெட் ராஜேஷ், தண்ணீர் குளம் ராஜேஷ் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர். இதில் தொகுதி தலைவர்கள் சேலை சுரேஷ், திருவூர் டில்லி, செவ்வை ராஜ், சுரேஷ், பம்செப் பாலா, புங்கை ரவி, பிரபாகரன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 131 இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பிறகு மாநிலத் செயல் தலைவர் எஸ்.மாரிமுத்து தலைமையில் தமிழர் பேரசுக் கட்சி நிறுவனத் தலைவர் செவ்வை கே.கணேசன் மாலை அணிவித்து வணங்கினார். இதில் வி.தேவதாஸ், ஏ.ஏழுமலை, மாலன், மணியரசு, புத்த கருணாகரன், சண்முகம், தயாளன், பிரபாகரன், காத்தவராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புரட்சி பாரதம் கட்சி மற்றும் டாக்டர் அம்பேத்கர் மன்றம் புன்னப்பாக்கம் மற்றும் கல்யாணகுப்பம் நண்பர்கள் சார்பில் புன்னை கோபால், பாக்கம் நாகு, கல்யாணகுப்பம் சுதாகர், ரஞ்சித்குமார், நாகு, சரத், சதீஷ்குமார் உள்பட பலர் மாலை அணிவித்து வணங்கினர்.ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது, இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகர கிழக்குப்பகுதி பொறுப்பாளர் டிவி சேகர், மண்டல குழு உறுப்பினர் அமுதா பேபி சேகர், மாமன்ற உறுப்பினர்கள் கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகளும் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒரகடம் குமணன், ஆவடி மாநகரச் செயலாளர் தளபதி நேதாஜி மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்று திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஏழைகளுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மாவட்ட வர்த்தக அணியை சேர்ந்த தனசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….
The post அம்பேத்கர் பிறந்தநாள் விழா பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.
