×

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி.20 போட்டி: 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

லாடர்ஹில்: வெஸ்ட்இண்டீஸ்-பாகிஸ்தான் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் 57, ஃபகார் ஜமான் 28, ஹசன் நவாஸ் 24ரன் அடித்தனர். 20 ஓவரில் இந்த அணி 6விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. வெ.இண்டீஸ் பவுலிங்கில் ஷமர் ஜோசப் 3 விக்கெட் எடுத்தார்.

பின்னர் 179 ரன் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ், ஜூவல் ஆண்ட்ரூ தலா 35, ஜேசன் ஹோல்டர் நாட் அவுட்டாக 30 ரன் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 20 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே எடுத்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் முகமது நவாஸ் 3, சைம் அயூப் 2 விக்கெட் எடுத்தனர். சைம் அயூப் ஆட்டநாயகன்விருது பெற்றார். 2வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

The post வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி.20 போட்டி: 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி! appeared first on Dinakaran.

Tags : First T20 ,West Indies ,Pakistan ,Lauderhill ,T20 ,Lauderhill stadium ,United States ,Saim Ayub ,Dinakaran ,
× RELATED ACC தலைவர் நக்வியை மீண்டும் புறக்கணித்த...