×

பிடபிள்யுஎப் உலக பேட்மின்டன்: விறுவிறு போட்டியில் கிறிஸ்டோ சாம்பியன்; மகளிர் பிரிவில் பட்டம் வென்ற யங்

ஹாங்சூ: பிடபிள்யுஎப் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ போபோவ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சீனாவின் ஹாங்சூ நகரில் பிடபிள்யுஎப் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, பிரான்சின் கிறிஸ்டோ போபோவ், சீன வீரர் ஷி யூகி மோதினர். போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்டோ, 21-19, 21-9 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் தென் கொரியா வீராங்கனை ஆன் செ யங், சீன வீராங்கனை வாங் ஸியி மோதினர். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய யங், 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய வாங், 21-18 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 3வது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய யங், 21-10 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய யங், மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Tags : BWF World Badminton ,Christo ,Young ,Hangzhou ,Christo Popov ,BWF World Tour Finals badminton ,BWF World Tour Finals ,Hangzhou, China… ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...