×

டாடா ஸ்டீல் 25 கி.மீ. ஓட்டம்; இந்திய மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த சீமா

கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று நடந்த டாடா ஸ்டீல் 25 கி.மீ. உலக ஓட்ட போட்டியில் ஆடவர் பிரிவில், உகாண்டா நாட்டின் ஜோசுவா செப்டெகெய், ஒரு மணி, 11:49 நிமிடத்தில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். தான்சானியா நாட்டின் அல்போன்ஸ் ஃபெலிக்ஸ் சியும்பு 2ம் இடம் பிடித்தார். மகளிர் பிரிவில், எத்தியோப்பியா ஓட்ட வீராங்கனை டெகிடு அஸிமெரா, ஒரு மணி 20:28 நிமிடத்தில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.

இந்தியன் எலைட் ஆடவர் பிரிவில் குல்வீர் சிங், ஒரு மணி 12:06 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இவர், தனது முந்தைய, ஒரு மணி 14:10 நிமிட சாதனையை முறியடித்துள்ளார். மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சீமா, ஒரு மணி 26:04 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். சஞ்சீவனி ஜாதவ், ஒரு மணி, 30:34 நிமிடங்களில் ஓடி, 2ம் இடம் பிடித்தார்.

Tags : Tata Steel ,25 km. Run ,Seema ,Kolkata ,World Run ,Uganda ,Joshua Seppukue ,Tanzania ,Alphonse Felix… ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...