×

அஞ்சலகங்கள் நாளை இயங்காது

 

விருதுநகர், ஆக.1: அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 எனும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அறிமுகப்படுத்த இருப்பதால் அஞ்சலகங்களில் நாளை பரிவர்த்தனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அஞ்சல்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தகவல்: அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 எனும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அனைத்து அஞ்லகங்களிலும் அறிமுகப்படுத்த இருப்பதால் வரும் ஆக.4ல் அனைத்து அஞ்சலகங்களிலும் ஒரு நாள் மட்டும் எந்தவித பரிவர்த்தனையும் நடைபெறாது என அறிவித்திருந்தோம்.

ஆனால் புதிய சாப்ட்வேர் முன்னதாக அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்த இருப்பதால் நாளை ஒரு நாள் மட்டும் எந்த பரிவர்த்தனையும் அஞ்சலகங்களில் நடைபெறாது. அனைத்து பரிவர்த்தனைகளும் ஆக.4 முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

 

Tags : Virudhunagar ,Virudhunagar Post Office ,Senior Divisional Superintendent ,Susila ,
× RELATED ஏம்பல் பகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்