×

எப்போதும்வென்றான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம்

தூத்துக்குடி, ஜூலை 31: எப்போதும் வென்றான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் சங்க செயலாட்சியர் லட்சுமிதேவி முன்னிலையில் ந.டந்தது. கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் சொர்ண செல்வம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம்டேனியல் ராஜ், உறுப்பினர்களுக்கு சங்கத்தால் வழங்கப்படும் கடன் மற்றும் உறுப்பினர் திட்டம் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வில் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். சங்கச் செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

The post எப்போதும்வென்றான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Elementary Agricultural Cooperative Association ,Lachmidevi ,COOPERATIVE UNION AIDE ,Thoothukudi District Cooperative ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு