×

ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 10: ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதிய ஒழுங்காற்று முறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும். 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மாநில அரசு ஊழியர்களுக்கான நிதிப்பகிர்வினை ஒன்றிய அரசு முறையாக வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டபூர்வ ஓய்வூதியம் உறுதி செய்ய வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்காலை கைவிட வேண்டும்.

காலிப்பணியடங்களை நிரப்பிட வேண்டும் மற்றும் காலாவதியான பணியிடங்களை புதுப்பித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு பேரணியாக வந்து கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Jaco Geo ,MADURAI ,JAKTO GEO ORGANIZATION ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...