×

கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் மின்சாரம் தாக்கி சிற்பி பலி

பண்ருட்டி, ஜூலை 9: பண்ருட்டி அடுத்துள்ள பனப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் ராஜா (25). சிற்ப வேலை செய்பவர். இவர் நேற்று பண்ருட்டி அடுத்துள்ள சிறு கிராமம் அய்யனார் கோயிலில் சிற்பம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த மின்கம்பில் இருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த ராஜாவுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடதக்கது.

The post கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் மின்சாரம் தாக்கி சிற்பி பலி appeared first on Dinakaran.

Tags : Panruti ,Ranganathan ,Panappakkam MGR Nagar ,Raja ,Ayyanar temple ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...