×

திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

 

உடுமலை, ஜூன்28: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில்,ஆலாம்பாளையம் கிராமத்தில் உள்ள பூசாரி நாயக்கன் ஏரிக்கு ஜூன் 27 முதல் 29-ம் தேதி வரை இரண்டாம் சுற்று தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.மானுப்பட்டி கிளை வாய்க்காலில் இருந்து இந்த தண்ணீர் திறக்கப்பட்டது. 20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

The post திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumoorthy Dam ,Poosarinayakkan Lake ,Udumalai ,Alampalayam ,
× RELATED பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு