- சட்டமன்ற உறுப்பினர்
- உடுமலை
- அதிமுக மாவட்ட இளைஞர் அணி மற்றும் வணிக அணி
- மாவட்ட இளைஞர் அணி
- பொருளாளர்
- கண்ணன்
- மாவட்ட வணிகப் பிரிவு
- செயலாளர்...
உடுமலை, டிச. 22: அதிமுக மாவட்ட இளைஞரணி மற்றும் வர்த்தக அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை முகாம் உடுமலையில் நடந்தது. மாவட்ட இளைஞரணி பொருளாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதயகுமார், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடுமலை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் முகாமை துவக்கி வைத்தார்.
சுவேதா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதிமுக நகர செயலாளர் ஹக்கீம் மற்றும் டாக்டர் வாசுதேவன், நிர்வாகிகள் பிரனேஷ், அன்புராஜா, முருகேசன், நாகராஜ், சாஸ்திரி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
