×

கூட்டணி ஆட்சி என்று பேசிய அமித்ஷாவுக்கு எடப்பாடிதான் பதில் அளிக்க வேண்டும் செங்கோட்டையன் பேட்டி

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
2026ல் பாஜக ஆட்சி என்றும், கூட்டணி அமைச்சரவை தான் என்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு, அதை பொறுத்தவரை பொதுச்செயலாளர் தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர என்னை போன்ற தொண்டர்கள் அதற்கு பதில் அளிக்கக்கூடாது என்றார். பாஜ சார்பில் மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டில் அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வது குறித்து கேட்டதற்கு, பொதுச்செயலாளர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார் என்றார். நடிகர் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவாரா என்று கேட்டதற்கு அது குறித்து நீங்கள் தான் (பத்திரிகையாளர்கள்) தெரிந்து கொண்டு கூற வேண்டும் என்றார்.

The post கூட்டணி ஆட்சி என்று பேசிய அமித்ஷாவுக்கு எடப்பாடிதான் பதில் அளிக்க வேண்டும் செங்கோட்டையன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Amitshah ,Sengkottayaan ,Reverend ,former minister ,K. A. Sengkottaian ,Union Minister ,Amitsha ,BJP ,Sengkottaian ,
× RELATED தைரியம் இருந்தால் சாதனை பட்டியலை...