×

101வது பிறந்த நாள் நல்லகண்ணுவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தியாகத்தின் பெருவாழ்வு. தோழர் நல்லகண்ணு ஐயா 101வது பிறந்ததாள். விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாய தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் – நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நல்லகண்ணுவை தொலைப்பேசி வாயிலாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Tags : Nallakanu ,Chennai ,K. Stalin ,Comrade ,Nallakannu Iya ,
× RELATED கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதன்...