×

ஒரு பக்கம் தாக்குதல்; மறு பக்கம் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பு இந்த கால நடிகர் திலகம் மோடி: ப.சிதம்பரம் விமர்சனம்

புதுக்கோட்டை: இந்த காலத்தில் நடிகர் திலகம் என்றால் அது பிரதமர் மோடி தான் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பெரியார்நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றியது மிகப்பெரிய பாதக செயல். மகாத்மா காந்தி படுகொலைக்கு ஈடான படுகொலை 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியது. 2015 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோல்வியின் நினைவு சின்னமாக மகாத்மா காந்தி தேசிய உறுதி அளிப்பு திட்டம் இருக்கும் என்று தெரிவித்து இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டாம், இருந்து விட்டு போகட்டும் என்று கூறினார். தற்போது 10 ஆண்டு கழித்து இந்த திட்டத்தை படுகொலை செய்துள்ளனர்.

திமுக கூட்டணியில் தேர்தல் உடன்பாடு தொகுதி பங்கீடுக்காக 5 பேர் குழு காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. இந்த 5 பேர் குழு, திமுக தலைவரை சந்தித்திருக்கிறார்கள். அவர், நான் ஒரு கமிட்டி அமைப்பேன், அப்போது 2குழுக்களும் பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். 2 குழுக்களும் பேசி அவர்கள் தலைவர்களுக்கு அறிக்கை அனுப்பிய பின்னர் இரு தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள். ஒரு பக்கம் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். ஒரு பக்கம் 11 ஆண்டு கழித்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். இது என்ன வேடிக்கை. நல்ல வேளை மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது காலத்தில் நடித்து நடிகர் திலகம் என்று பெயர் எடுத்தார். இந்த காலத்தில் நடிகர் திலகம் என்றால் அது பிரதமர் மோடி தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Christmas ,Modi ,P. Chidambaram ,Pudukottai ,Nadigar ,Former Union Finance Minister ,Congress Party ,Periyarnagar, Pudukottai ,
× RELATED 101வது பிறந்த நாள் நல்லகண்ணுவுக்கு முதல்வர் வாழ்த்து