×

சிவகங்கையில் ரூ.1.54 கோடியில் மின் மயானம்

 

சிவகங்கை, மே 31: சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்திற்கு பின் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தெரிவித்ததாவது:சிவகங்கை நகராட்சி 2வது வார்டில் புதிய மின்மயானம் அமைக்க ரூ.1.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11வது வார்டில் உள்ள சாத்தப்ப ஊருணியில் நடைபாதை, தடுப்பு கம்பிகள் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்புத்தராமலும், கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் நகராட்சி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென நகர் மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு தெரிவித்தார்.

The post சிவகங்கையில் ரூ.1.54 கோடியில் மின் மயானம் appeared first on Dinakaran.

Tags : crematorium ,Sivaganga ,Sivaganga Municipality ,Municipal Council ,Durai Anand ,Electric crematorium ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...