×

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யாவில் இருந்து எரிகோல்கள் வருகை

நெல்லை, மே 23: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா, ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலைகளை அமைத்துள்ளது. இதில் முதல் மற்றும் 2வது அணு உலைகள் இயங்கி வருகின்றன. இதில் இருந்து தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து 3 மற்றும் 4வது அணுஉலைகள் அமைக்கும் பணிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இதனிடையே 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த அணு உலையில் எரிக்க பயன்படும் எரிகோல்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து எரிகோல்கள் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதன்பின்னர் அங்கிருந்து மூன்று கன்டெய்னர் லாரிகள் மூலம் எரிகோல்கள் ஏற்றப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் நேற்று முன்தினம் நள்ளிரவு கூடங்குளத்திற்கு வந்தடைந்தது. அங்குள்ள குடோன்களில் எரிகோல்கள் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

The post கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யாவில் இருந்து எரிகோல்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Russia ,Kudankulam ,Nuclear Power Plant ,Nellai ,India ,Kudankulam, Nellai district ,Kudankulam Nuclear ,Power Plant ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...