- ராஜீவ் காந்தி
- வேதாரண்யம்
- காங்கிரஸ்
- மயிலாடுதுறை
- எம்.பி. பி. ராஜேந்திரன்
- வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடம்...
வேதாரண்யம், மே 22: வேதாரண்யத்தில் ராஜீவ்காந்தியின் 34-வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தி திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜேந்திரன் வழிகாட்டுதலின் பேரில் ராஜீவ்காந்தி படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன் தலைமை வகித்தார். நாகை மாவட்ட சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் போஸ், வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாந்தாஷீலாசெல்வம், நகர துணை தலைவர், மெய்யாரபீக், நகர பொதுச் செயலாளர் சோட்டா பாய், சிறுபான்மை அணி மாவட்டத் துணைத் தலைவர் சௌரிராஜன், காங்கிரஸ் கட்சி மகளிர் அணி செல்வராணி, தங்கலட்சுமி, தமயந்தி உள்ளிட்ட மாவட்ட, வாட்டார, நகர காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
The post வேதாரண்யத்தில் ராஜீவ்காந்தி 34-வது நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.
