×

தஞ்சை கீழவாசல் அருகே புதர் மண்டிக்கிடக்கும் போலீஸ் குடியிருப்பு

தஞ்சாவூர், மே 17: தஞ்சை உட்கோட்டத்தில் தஞ்சை கிழக்கு, போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர் கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர் கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுளுக்கு அரசு குடியிருப்புகள் உள்ளன. தஞ்சை கீழவாசல் போலீஸ் நிலை யம் அருகே போலீஸ்காரர்களுக்கான குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 1982-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. இதில் தரைதளம், முதல்தளம், 2-ம் தளம் என ஒவ்வொரு தளத்திலும் 4 வீடுகள் வீதம் ஒரு பிளாக்கிற்கு 12 வீடுகள் கட்டப்பட்டன.மொத்தம் 11 பிளாக்குகள் வீதம் 132 வீடுகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு பிளாக்கிற்கும் தனித்தனி குடிநீர் தொட்டிகளும் கட்டப்பட்டன.

இதற்காக இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மோட்டார் பொருத்தப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டன. இதற்காக மோட்டார் அறையும் தனியாக கட் டப்பட்டன. இதில் தஞ்சை உட்கோட்டத்தில் உள்ள போலீஸ்காரர்கள் வசித்து வந்தனர். இந்த கட்டிடங்கள் பயன்ப டுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டன. மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் இந்த குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன. மேலும் சீமைக்கருவேல மரங்கள் கட்டி டங்கள் உயரத்திற்கு வளர்ந்து காணப்படு கின்றன. புதருக்குள் பாழடைந்த நிலையில் போலீஸ் குடியிருப்புகள் காணப்படுகின்றன.

மேலும் இந்த கட்டிடத்தில் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகின்றன. இந்த குடியிருப்புகளின் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், குடியிருப்புகள், கீழவாசல் போலீஸ் நிலையம், போலீஸ்காரர்கள் குடியிருப்பு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்புகள் உள்ளன. விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு வசிப்பவர்களும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக செடி, கொடிகள் மண்டிக்கிடக்கும் இந்த கட்டிடங்கள் எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடனே அந்த பகுதி யில் மக்கள் சென்று வருகின்றனர். எனவே இந்த போலீஸ் குடியிருப்பை இடித்து விட்டு அங்கு புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். அல்லது அதனை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என போலீஸ்காரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post தஞ்சை கீழவாசல் அருகே புதர் மண்டிக்கிடக்கும் போலீஸ் குடியிருப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Keezhavasal ,Thanjavur ,Thanjavur East ,Traffic Crime Investigation Division ,West, South ,Medical College ,Women's Police Stations ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...