×

நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகர், மே 17: விருதுநகர் நகராட்சி சார்பில் காமராஜர் பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு விருதுநகர் நகராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து விருதுநகர் காமராசர் பேருந்து நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டால் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், நகர்மன்ற தலைவர் மாதவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார். மேலும், இதில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர், சுகாதார ஆய்வாளர்கள், களப்பணி உதவியாளர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Dengue ,Virudhunagar ,Awareness Program ,Kamarajar Bus Station ,Virudhunagar Municipality ,National Dengue Day ,Virudhunagar District Public Health and Immunization Department ,Virudhunagar Kamarasar ,Dengue Awareness ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு