×

பீகாரைச் சேர்ந்த இளம்பெண் சாவு

தர்மபுரி, மே 17: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜதேவ் சிங். இவரது மனைவி இந்துதேவி(32). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் அன்னை சத்தியா நகர் பகுதியில் தங்கி, கடந்த 25 வருடமாக கூலி வேலை செய்து வந்தனர். இந்து தேவிக்கு இருதய நோய் உள்ளது. கடந்த 8ம் தேதி வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து, கடந்த 10ம் தேதி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துதேவி உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பீகாரைச் சேர்ந்த இளம்பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Dharmapuri ,Rajdev Singh ,Indudevi ,Annai Satya Nagar ,Sogathur ,Dharmapuri district ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...