- மதுரை மீனதாசி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
- மதுரை
- மதுரை மீனதாசி சுந்தரேஸ்வரர் திருக்களையானம்
- மீனாதசி திருக்கல்யாணம்
- மதுரை சித்திரை திருவிழா
- திருக்கல்யாணம்
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். திருக்கல்யாணத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கியூஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின்போது தங்கள் தாலிகளை மாற்றி புதுப்பித்துக்கொள்ள பக்தர்கள் வருகை தந்தனர். கூட்ட நெரிசலில் சிக்காமல் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் 10 LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
The post கோலாகலமாக நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.
