×

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள உயர் அழுத்த காற்று இணைய வாய்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் கனமழை பெய்யும்

சென்னை: அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள உயர் அழுத்த காற்றுகள் இணையும் வாய்ப்புள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. சுமார் 8 மாவட்டங்களில் 50 மிமீக்கும் மேல் மழையும், சில இடங்களில் 100 மிமீ வரையும் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவின் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி பயணித்த மழை மேகங்கள் சென்னையில் பெய்யாமல் சற்று மேற்குப் புறம் நகர்ந்து காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளான திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையாக கொட்டித் தீர்த்தது. இன்றில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். 10ம் தேதியில் இருந்து படிப்படியாகவும் 12ம் தேதியில் இருந்து மேலும் கூடுதலாகவும் மழை பெய்யத் தொடங்கும்.

15ம் ேததியும் கனமழை பெய்யும். கோடை வெயில் தெரியாத அளவுக்கு மழை பெய்து குளிர்விக்கப் போகிறது. இந்நிலையில் நேற்று மதிய நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை,தூத்துக்குடி மாவட்டங்களிலும் அதைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிகவகங்கை மாவட்டத்திலும் மழை பெய்யும். மதியம் 3 மணிக்கு மேல் திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்தது. பிறகு இந்த மழைப் பொழிவு திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் என்று நெருங்கி வந்து நள்ளிரவில் டெல்டா மாவட்டத்திலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்தது.

கிழக்கில் இருந்து வீசும் காற்றும் மேற்குப் பகுதியில் இருந்து வீசும் காற்றும் இன்று இணையும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். வட கடலோரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு நேரத்திலும் மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 9ம் தேதி மேலும் பரப்பில் அதிகரித்து மழை பெய்யும். 12ம் தேதி முதல் கனமழை பெய்யும். வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் உயர் அழுத்த காற்று நீடித்து, ஒருபுறம் நீராவிக் காற்றையும் குவிக்கும் போது மழை கனமழையாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ஈரோடு பகுதியில் 103.6 டிகிரி வெயில் ெகாளுத்தியது. வேலூர், திருப்பத்தூர், சேலம், திருச்சி, சென்னை 100 டிகிரி வெயில் நிலவியது.

 

The post அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள உயர் அழுத்த காற்று இணைய வாய்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Arabian Sea ,Bay of Bengal ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...