- தேவகோட்டை
- ஷேக் அப்துல்லா
- முகமதியர்பட்டினம், தேவகோட்டை
- வெள்ளையன் ஊரன்
- திருவாடானை
- ராமநாதபுரம் மாவட்டம்
தேவகோட்டை, மே 6: தேவகோட்டை முகமதியர்பட்டினத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (47). இவர், அப்பகுதியில் உள்ள வெள்ளையன் ஊரணி பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த சந்தையில் ஆடுகளை வாங்கி கொண்டு சரக்கு வாகனத்தில் கடைக்கு வந்து கொண்டிருந்தார். ராவுத்தர் (22) வண்டியை ஓட்டி வந்தார்.
தேவகோட்டை அருகே மானாம்புவயல் என்ற இடத்தில் நேற்று அதிகாலை வந்தபோது, எதிரே காரைக்குடியில் இருந்து தொண்டிக்கு மீன் வாங்க சென்ற சரக்கு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஷேக் அப்துல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் ராவுத்தர், மற்றொரு சரக்கு வாகனத்தில் வந்த கார்த்திக் (22), மணிகண்டன் (24) ஆகியோர் படுகாயமடைந்தனர். தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post வாகனங்கள் மோதி கறிக்கடைக்காரர் பலி appeared first on Dinakaran.
