×

பணியில் பெர்மிஷன் போட்டுவிட்டு விஜய்க்கு மாலை அணிவித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்


மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பெர்மிஷன் போட்டு போய், கட்சிக் கொடியுடன் நடிகர் விஜய்க்கு மாலை அணிவித்ததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு கதிரவன் மார்க்ஸ். இவர் தீவிர விஜய் ரசிகர் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் சித்திரை திருவிழாவையொட்டி, மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொடைக்கானலில் சினிமா படப்பிடிப்பிற்கு செல்வதற்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.

அவரை பார்க்க பணி நேரத்தில் பெர்மிஷன் கேட்டு கதிரவன் மார்க்ஸ் மப்டியில் விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு தவெக கட்சிக் கொடியுடன் விஜயை வரவேற்று மாலை அணிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று மாலை கதிரவன் மார்க்ஸை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

The post பணியில் பெர்மிஷன் போட்டுவிட்டு விஜய்க்கு மாலை அணிவித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Madurai ,Chitra festival ,Madura ,Madurai Theppakulam Crime Division Police ,Kathrawan Marks ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...