- ஆளுநர் ஆர் என்.
- ஊட்டி
- ரவி
- துணை வேந்தர்கள்
- 2 நாள் துணை அமைச்சர்கள் மாநாடு
- ராஜ்பவன் மாளிகை
- ஆளுநர்
- R.N.
- தின மலர்
ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று 2வது நாளாக நடந்த மாநாட்டிலும் 35 துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய 2 நாள் துணை வேந்தர்கள் மாநாடு ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் நேற்று முன்தினம் தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 35 பேரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். தனியார் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உட்பட 14 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இரண்டாவது நாளாக நேற்றும் இந்த மாநாடு நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு துவங்கிய இந்த மாநாடு மாலை 5 மணி வரை நடந்தது. அப்போதும் 35 துணை வேந்தர்களும் பங்கேற்கவில்லை. மாநாட்டில், உயர் கல்வியை மேம்படுத்துவது குறித்து பல்வேறு கல்வியாளர்கள் பேசினர். இதைத்தொடர்ந்து, நேற்று மாலை நிறைவு விழா நடந்தது. துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட துணை வேந்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
நமது நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களை பயிற்றுவிக்கவும், அவர்களுக்கு சிறந்த திறனை கொடுக்கவும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவியாய் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்றுவிக்க தகுதியான திறமையான பயிற்றுநர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. பேச்சு குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கேள்விப்படுகிறேன். அவர்களை திறமையான மாணவர்களாக மாற்ற செயற்கை நுண்ணறிவு ஒரு வரப்பிரசாதம். 2008ம் ஆண்டு வரை சீனர்கள் நமது ஐடி துறையை ஆர்வத்துடன் பார்த்தார்கள். ஆனால், தற்போது அப்படி இல்லை. நம்மை காட்டிலும் தற்போது சீனா பல மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
நாட்டு வளர்ச்சியின் களஞ்சியமாக கருதப்படும் உயர் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணையாமல் தனித்தனியாக இயங்கியதும் ஒரு காரணமே. இன்றைய ஆராய்ச்சியின் பெரும்பகுதி கூட்டு முயற்சியாகும், அது ஒரு பலத்தை பெருக்கும் திறன் கொண்டது. வரும் ஆண்டுகளில் துணை வேந்தர்கள் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். 2047ம்ஆண்டுக்குள் முழுமையாக வளர்ந்த நாடாக மாறுவதற்கு நாம் களத்தில் இறங்க வேண்டிய நேரம். எனவே, துணை வேந்தர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இது போன்ற மாநாடுகள் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் ேபசினார்.
The post ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டியில் 2வது நாள் மாநாடு 35 துணை வேந்தர்கள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.
