×

ஊட்டி, கொடைக்கானலில் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஊட்டி, கொடைக்கானலில் விடுதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மூவர் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தங்கும் விடுதிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கன்றனவா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

The post ஊட்டி, கொடைக்கானலில் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Ooty ,Kodaikanal ,Chennai ,District Revenue Officer ,Ooty and ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...