×

ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்ய பொதுப்பள்ளிக்கான மேடை அமைப்பு கோரிக்கை

சென்னை: பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஆளுநர் ஒரு அரசு நிதி பெறும் கல்லூரியில் பேசும் போது ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரை மூன்று முறை மாணவர்களை உச்சரிக்கக் கூறியுள்ளார். தமிழக ஆளுநராக இருக்கும் நிலையில் அவர் குறிப்பிட்ட ஒரு மதத்தின் பிரச்சாரகர் அல்ல.

இருப்பினும் அவர் பேசும் போது ஒருகுறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரை 3 முறை சொல்ல வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டது அதிர்ச்சியாக உள்ளது. ஆளுநர் பதவி ஏற்கும் போது எடுத்த வாக்குறுதியை மீறி பேசியுள்ளார். அரசமைப்பு சட்டத்தின் 159வது பிரிவை அவர் வேண்டுமென்றே மீறியதற்காக ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்ய பொதுப்பள்ளிக்கான மேடை அமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Governor ,Chennai ,Prince Gajendrababu ,general secretary ,state platform for public schools ,Tamil Nadu ,organization for ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...