- சென்னை
- திருமங்கலம்
- திருநெல்வேலி
- நல்லாம நாயக்கன்பட்டி
- Kallikudi
- மதுரை மாவட்டம்
- மதுரை-திருநெல்வேலி நெடுஞ்சாலை

திருமங்கலம்: சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. இன்று காலை 5.45 மணியளவில் மதுரை – திருநெல்வேலி நெடுஞ்சாலையில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென வெண்புகையுடன் தீப்பற்றியது. இதனைப் பார்த்த பஸ் டிரைவர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பஸ்சில் இருந்த சுமார் 40 பயணிகளும் உடனடியாக பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.
இதையடுத்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ்சின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. பஸ் பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் இன்று காலை நான்கு வழிச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
The post திருமங்கலம் அருகே இன்று காலை சென்னை பஸ்சில் பயங்கர தீ : 40 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.
