×

செல்வாக்கு இல்லாத செங்கோட்டையனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: வைகைச்செல்வன் பேட்டி

சென்னை: செல்வாக்கு இல்லாத செங்கோட்டையனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர் குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் பேசுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் , அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், செல்வாக்கு இல்லாத செங்கோட்டையனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. செங்கோட்டையன் குறித்து விரைவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார். அதிமுகவில் எந்த ஒரு உள்கட்சி பிரச்னையும் இல்லை. சில சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி அதிமுக இல்லை. பல சோதனைகள் வந்தாலும் மேலே எழுகிற கட்சிதான் அதிமுக’ என்றார்.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post செல்வாக்கு இல்லாத செங்கோட்டையனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: வைகைச்செல்வன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sengottaiyan ,Vaigaichelvan ,Chennai ,AIADMK ,former minister ,General Secretary ,Edappadi Palaniswami ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...