- தேவாரம்
- கம்பம்
- சட்டமன்ற உறுப்பினர்
- கம்பம் ராமகிருஷ்ணன்
- தே. மேட்டுப்பட்டி
- டி. மீனாட்சிபுரம்
- தேவாரம்…
- கம்பம் எம்.எல்.ஏ.
தேவாரம், ஏப். 2: தேவாரம் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை, சமுதாய உணவு கூடம், மற்றும் பள்ளி கட்டிடங்களை கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தே.மேட்டுப்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடமும், அதே போல் இங்கு உள்ள சமுதாயக் கூடத்தில் உணவு தயாரிக்கும் கூடமும் கட்டப்பட்டுள்ளது. மேலும், தம்மிநாயக்கன்பட்டியில் உணவு கூடம், மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளி கட்டிடம் என தேவாரம் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குமரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முருகன், கலைச்செயலாளர்கள் செல்வம் குணசேகரன் திமுக நிர்வாகிகள், சுந்தரேசன், பிரிட்டோ காளிமுத்து, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post தேவாரம் பகுதியில் ரூ.70 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்: கம்பம் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
