×

சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணியிடங்கள் 100 சதவிகிதம் காலியாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இதனால் அரசின் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், நடவடிக்கைகள் பலவீனமடைகின்றன. இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தினை எஸ்டிபிஐ கட்சி ஆதரிப்பதோடு, தமிழக மக்களின் நலன் கருதி, இந்தக் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப எஸ்டிபிஐ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : STBI ,Chennai ,president ,Nellai Mubarak ,Tamil Nadu Federation of Health Inspector Associations ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...