×

சுங்கான்கடை தூய சவேரியார் இன்ஜி. கல்லூரியில் விளையாட்டு விழா

திங்கள்சந்தை, மார்ச் 29 : சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் மகேஷ்வரன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசிய தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முனைவர் ஆறுமுகம் பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கல்லூரி நிதி காப்பாளர் அருட்பணி சேவியர் ராஜ், துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தினர். உடற்கல்வி இயக்குனர் தாமஸ் மத்தியாஸ், சகாய எமலின் ஜோசிலா, பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சுங்கான்கடை தூய சவேரியார் இன்ஜி. கல்லூரியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Sungaankadai Thuya Saveriyar Eng. College Sports Festival ,Sungaankadai Thuya Saveriyar Catholic Engineering College Sports Festival ,Principal ,Maheshwaran ,Arutpani Godwin Selva Justus ,National Athletics Championship Gold ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...