×

சென்னை கார் பந்தயம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

சென்னை: சென்னை கார் பந்தயம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது; நான் பதில் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை. டெல்லியில் 3 கார்கள் மாறி அதிமுக அலுவலகத்துக்கு சென்றதாக கூறுகிறார்கள் எடப்பாடிக்கு வாழ்த்துகள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ரூ’ போட்டு தமிழ்நாடு பட்ஜெட் தொடங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை ‘ரூ’ போட்டு அனைவரையும் அலறச் செய்தவர் முதலமைச்சர். விரைவில் அனைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என துணை முதல்வர் தெரிவித்தார்.

The post சென்னை கார் பந்தயம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Deputy ,Udayanidhi Prumidam ,Deputy Chief ,Udayanidhi ,Udayanidhi Stalin ,Youth Welfare and Sport Development Department ,Udayanidhi Prumitam ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...