×

ஆச்சனூர் அரசு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு கூட்டம்

 

திருவையாறு, மார்ச்28: திருவையாறு அடுத்த ஆச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியல் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவையாறு அடுத்த ஆச்சனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கோமளவல்லி தலைமை வகித்தார்.

மரூர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சுகுணா மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அறிவுரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தணிகாசலம் சிறப்புரையாற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி புவனேஸ்வரி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பென்சில், பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கினார். முடிவில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பூபதிராமன் நன்றி கூறினார்.

The post ஆச்சனூர் அரசு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : harassment awareness ,Achanur Government School ,Thiruvaiyaru ,Achanur ,Government High School ,Parent Teacher Association ,Thiruvaiyaru… ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்