- திமுக
- முகவர்கள்
- ஒட்டன்சத்திரம் இடையகோட்டை
- ஒட்டன்சத்திரம்
- மார்கம்பட்டி
- எல்லப்பட்டி
- சின்னக்காம்பட்டி
- ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியம்
- அமைச்சர்
- அர. சக்ரபர்ணி
- பரணி கே. மணி
- தொழிற்சங்க செயலாளர்
- ஜோதீஸ்வரன்…
ஒட்டன்சத்திரம், மார்ச் 28: ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மார்க்கம்பட்டி, எல்லப்பட்டி, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொகுதி பொறுப்பாளர் பரணி கே.மணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் அவை தலைவர் செல்லமுத்து, ஒன்றிய பொருளாளர் அழகியணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் தலைவர்கள் செல்லமுத்து, சுப்பிரமணி, ராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நிகிலேஷ்குமார், துரைச்சாமி, சின்னக்கம்பட்டி முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் சண்முகம், ராஜசேகரன், வலையபட்டி சின்னச்சாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், இளைஞரணி துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, பழனிசாமி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.
