- பாசிப்பட்டினம் கிராமம்
- தொண்டி
- பாசிபட்டினம்
- மரைன்
- எஸ்.ஐ. கதிரவன்
- மீன்பிடி துறை
- இன்ஸ்பெக்டர்
- அபு தாஹிர்
- மீன்வள அமலாக்கத் துறை
- சப்-இன்ஸ்பெக்டர்
- குருநாதன்
- மீன்வளம்…
- தின மலர்
தொண்டி, மார்ச் 28: தொண்டி அருகே பாசிபட்டினம் கிராமத்தில், மீனவர்களிடம் கடல் பயணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கூட்டம் நடைபெற்றது. தொண்டி மரைன் எஸ்.ஐ.கதிரவன் தலைமை வகித்தார்.
மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், மீன்வள அமலாக்கு துறை சார்பு ஆய்வாளர் குருநாதன், மீன்வள மேற்பார்வையாளர் கணேஷ் குமார், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் மீனவர்கள் நலம் கருதி, கடலுக்கு செல்பவர்கள் தொலைபேசி எடுத்து செல்ல வேண்டும். மேலும் லைப் ஜாக்கெட் வாட்டர் கேன் எடுத்துச் செல்ல வேண்டும். கடலுக்குள் சந்தேகப்படும் படியான நபர்களை கண்டால், உடனடியாக மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடத்தல் பொருட்கள் தென்பட்டாலும், சந்தேகப்படும்படி ஏதேனும் பொருட்கள் கடலில் மிதந்து வந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பேசினர்.
The post பாசிபட்டினம் கிராமத்தில் மீனவர் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.
