×

கிணத்துக்கடவு பகுதியில் பனை நொங்கு விற்பனை தீவிரம்

 

கிணத்துக்கடவு, மார்ச்25: கோடை வெயில் தற்போது கடுமையாக கொளுத்தி வருவதால்,அதிலிருந்து தப்பிக்க நினைக்கும்,பொதுமக்கள் இளநீர்,பனை நொங்கு,தர்பூசணி,மோர்,நன்னாரி சர்பத்,கம்பங்கூல், ராகி கூல் ஆகியவற்றை பருகி வருகிறார்கள். கோடை வெயில் காலத்தில் இளநீர் சரிவர கிடைக்காததால் இளநீர் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதனால், இளநீரை பொதுமக்கள் எளிதாக கிடைக்கக்கூடிய தர்பூசணி,பனை நொங்கு உள்ளிட்டவைகளை தேடி சென்று உண்டு வெப்பத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். இந்தநிலையில்,தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிலர் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் தங்கியிருந்து,தென்காசியில் இருந்து பனை நொங்கை வரவழைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.இதனால் பனை நொங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.

The post கிணத்துக்கடவு பகுதியில் பனை நொங்கு விற்பனை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kinathukadavu ,Dinakaran ,
× RELATED மாடியில் இருந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி