மதுக்கரை, டிச.27: கோவையை அடுத்துள்ள சீட்கோ பகுதியில் உள்ள ரயில் பாதையின் குறுக்கே, போக்குவரத்து இடையூறை தடுக்கும் வகையில், சுமார் 20 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ரயில்வே கேட் மூடி, திறக்கும் போது ஏற்படும் கால விரயம் தடுக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இதனால், தற்போது அந்த மேம்பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்து, குழி ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
குழி ஏற்பட்டுள்ள அந்த இடத்தில், கான்கிரீட் முழுவதும் பெயர்ந்து கீழே உள்ள சாலை தெரிகிறது. மேலும் வாகனங்கள் செல்லும்போது, அங்கு அதிர்வு ஏற்பட்டு வருகிறது. எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கான்கிரீட் பெயர்ந்து, குழி ஏற்பட்டுள்ள இடத்தை சரிசெய்து. மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
