- சமநிலை கிறிஸ்துமஸ்
- கோவை நகர காங்கிரஸ் கமிட்டி
- கோயம்புத்தூர்
- நகர மாவட்ட காங்கிரஸ்
- ஜனாதிபதி
- விஜய் குமார்
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
- சிறுபான்மை
- துரை தேசிய ஒருங்கிணைப்பாளர்
- ஆந்திரப் பிரதேசம்...
கோவை, டிச. 25: கோவை மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துரை தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆந்திர பிரதேச பொருப்பாளருமாகிய டென்ஸ்டன்ராஜா கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அனுப் அந்தோணி, அருள்தாஸ், வழக்கறிஞர் சஜன், உமாபதி தாம்பூரன், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசலம் அடிகளார், மவுலானா, முகமது அயூப், மாநில துணை தலைவர் கந்தசாமி, ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை ஒருங்கிணைப்பாளர் துரை அருள்தாஸ், தமிழ் செல்வன், மாமன்ற உறுப்பினர் சங்கர், சவுந்திரகுமார், பாஸ்கர்,
கோட்டை செல்லப்பா, காமராஜ், ரகமதுல்லா, ஜெர்ரி லூயிஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் விழாவில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியில் ராபட் நன்றி கூறினார்.
