×

சூலூரில் இன்று புதிய வணிக வளாகத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார்

சூலூர், டிச.30: கோவை மாவட்டம் சூலூரில் புதிய வணிக வளாக கட்டிடத்தை துணை முதல்வர் காணொலி காட்சி மூலமாக இன்று (30ம் தேதி) திறந்து வைக்கிறார். சூலூர் பழைய பேருந்து நிலையம் இருந்த பகுதியில் இடித்து விட்டு மூலதன மானியம் திட்டத்தின் கீழ் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று (30ம் தேதி) காலை நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் ஹாக்கி விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்கும் தமிழக துணை முதல்வர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். திறப்பு விழா நடைபெற உள்ளதையொட்டி சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மற்றும் துணை தலைவர் சோலை கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags : Deputy Chief ,Sulur ,SULOOR ,KOWAI DISTRICT ,Sulu ,
× RELATED மோடி கிச்சன் துவக்கம்