கோவை, டிச.30: தமிழகத்தின் முன்னணி உலகளாவிய வணிக தளமாக ஜூபிலண்ட் தமிழ்நாடு தன்னை நிலை நிறுத்தி வருகிறது. 2024, 2025 ஆகிய 2 பதிப்புகளில் இணைந்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் பார்வையாளர்கள், 400க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், 75க்கும் மேற்பட்ட சிறப்பு பேச்சாளர்கள், 22 நாடுகளை சார்ந்த 250க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்றனர். வரும் ஜனவரி 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை பீளமேடு கொடிசியாவில் குளோபல் வணிக எக்ஸ்போ நடத்தவுள்ளது. இதில் 350க்கும் மேற்பட்ட கண்காட்சி ஸ்டால்கள் இடம் பெறும். டைட்டில் பார்ட்டனராக கார்த்திபுரம் இணைந்துள்ளது.
