சூலூர், டிச.31: கோவை மாவட்டம் சூலூரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்து. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சூலூரில் கடை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு அதற்கான சாவி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், செயல் அலுவலர் சரவணன் முன்னிலையில் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் பயனாளிகளுக்கு சாவிகளை ஒப்படைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் சோலை கணேசன், நகரச்செயலாளர் கௌதமன், பசுமை நிழல் விஜயகுமார், சூ.பே.கருணாநிதி உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
