தொண்டாமுத்தூர், டிச.27: கோவைபுதூரில் நடந்த திமுக பாக முகவர் கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி பங்கேற்று, நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார். கோவை வடக்கு திமுக மாவட்டத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கோவைபுதூர் பாகம் எண் 290-ல் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி பேசினார்.
மேலும் பகுதி செயலாளர் முரளி, ஜீவா இப்ராஹிம், ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, கூட்டம் முடிந்த பின்பு, இல்லம்தோறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிஎல்சி, பிடிஏ இளைஞரணி, மகளிரணி, கிளை செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
