×

மோடி கிச்சன் துவக்கம்

கோவை, டிச.27: பாஜ சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காந்திபுரம் விகேகே மேனன் ரோட்டில் பாஜ அலுவலகம் முன்பு இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் கிருஷ்ண பிரசாத் ஏற்பாட்டில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் மோடி கிச்சன் திறக்கபட்டுள்ளது.

அங்கு தினமும் 12 மணி முதல் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. இந்த உணவகத்தை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் ராம் நகர் மண்டல தலைவர் மணிகண்டன், ராம் நகர் இளைஞரணி மண்டல தலைவர் ஹரிஹரன் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

Tags : Modi ,Coimbatore ,BJP ,Atal Bihari Vajpayee ,Gandhipuram ,VKK ,Menon… ,
× RELATED மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா