×

பங்கு தந்தை மீது நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: விருதுநகரில் புனித இன்னாசியார் ஆலயத்துக்காக வாங்கிய நிலத்தை பங்கு தந்தை தனது பெயரில் பதிவு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. கோட்டைப்பட்டி கிராமத்தில் வாங்கிய நிலத்தை தனது பெயரில் பங்கு தந்தை அந்தோனி பாக்கியம் பதிவு செய்ததாக புகார் எழுந்தது. மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என நீதிபதிகள் தெரிவித்த நிலையில், மதுரை கே.புதூரைச் சேர்ந்த அலெக்ஸ் ஆண்டனி என்பவர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post பங்கு தந்தை மீது நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Madurai ,St. Innasiyar temple ,Virudhunagar ,Anthony Bagkiam ,Kottayapatti ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!