×

கமல்ஹாசன் தலைமையில் மநீம செயற்குழு கூட்டம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்பேட்டை மநீம கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது மநீம கட்சி நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், துணை தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, பொதுச்செயலாளர் ஆ.அருணாசலம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உடனிருந்தனர்.

அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது மற்றும் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக கமல்ஹாசன் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். வரும் ஜூலை மாதம் திமுகவின் ராஜ்யசபா எம்.பியாக கமல்ஹாசன் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை பெற்று மநீம சட்டசபைக்குள் அடியெடுத்து வைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று, கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தினார்.

The post கமல்ஹாசன் தலைமையில் மநீம செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Maneema ,Chennai ,Makkal Needhi Maiam ,Alwarpet ,2026 assembly elections… ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...