- அமலாக்க இயக்குநரகம்
- STBI
- சென்னை
- தேசிய துணைக் குடியரசுத் தலைவர்
- வாஸ். ஷர்புதீன்
- யூனியன் அரசு
- பாராளுமன்ற
- தின மலர்
சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் வழ.ஷர்புதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த 193 வழக்குகளில், இரண்டு வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது மோடி ஆட்சியில் அமலாக்கத்துறை தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு தெளிவான சான்றாக அமைகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட வழக்குகளில், வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட அரசியல் சார்ந்த அனைத்து வழக்குகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post அமலாக்க துறையால் பதிவு செய்யப்பட்டஅனைத்து வழக்குகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கோரிக்கை appeared first on Dinakaran.
