×

திருவள்ளூர் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம்; தேவை இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளூர் நகரத்திற்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து, அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், சென்னை மாநகராட்சிக்கு வரும் தண்ணீர் முழுவதும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தான் வருகிறது.

திருவள்ளூர் நகரத்திற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் பழைய குழாய்கள் மாற்றி புதிய குழாய் பதிக்க முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார். திருவள்ளூர் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம் தேவை இருப்பின் இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

 

The post திருவள்ளூர் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம்; தேவை இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Municipality ,Minister ,K.N. Nehru ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,MLA ,V.G. Rajendran ,Tiruvallur ,Chennai Corporation ,Municipality ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...