
புழல்: மாதவரம் மண்டலம் 17வது வார்டுக்கு உட்பட்ட புழல் அடுத்த வடபெரும்பாக்கம், சின்ன தோப்பு, விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில், 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பத்தினருக்கு, இதுநாள்வரை வீட்டுமனை பட்டா இல்லை எனக்கூறப்படுகிறது.
இதனால், அரசின் பல்வேறு உதவிகள் பெற கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, வடபெரும்பாக்கம் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல சங்கத்தினர், புழல் பாலாஜி நகரில் உள்ள மாதவரம் வட்டாட்சியர் விக்னேசை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இம்மனுவை பெற்றுக்கொண்ட மாதவரம் வட்டாட்சியர் விக்னேஷ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
The post வீட்டுமனை பட்டா கோரி வட்டாட்சியரிடம் மனு appeared first on Dinakaran.
