×

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனைப்படி அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சித்திரை முழு நிலவு மாநில மாநாட்டை இளைஞர்களின் பெருவிழாவாக கொண்டாடப்படுவது குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம், மேல்மருவத்தூர் தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மணப்பாக்கம் தே.சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின்போது ஒன்றிய, நகர, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டுவது, சுவர் விளம்பரங்கள் எழுதுவது, பாமக சாதனைகள் குறித்த விளம்பர பதாகைகள் அமைப்பது, 10.5% சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், மதுராந்தகம் தொகுதி செயலாளர்கள் க.ப.லட்சுமிஆனந்து, எ.ஐயப்பன், அச்சிறுப்பாக்கம் நகர செயலாளர் ஆ.வே.பக்கிரிசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாக்சர் சு.சதீஷ் மற்றும் பாமக பொறுப்பாளர்கள் ஆதிகேசவன்,மனோகரன், அர்ஜுனன், கண்ணன், முருகன், சந்தோஷ்,விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Patali Makkal Katchi Chithirai Full Moon Conference ,Madhurantakam ,Chengalpattu District ,Patali Makkal Katchi ,Founder ,Ramadoss ,State ,President ,Anbumani Ramadoss ,Achirupakkam ,South Union ,Chithirai Full Moon State Conference ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...